என் மலர்tooltip icon

    இந்தியா

    சக மாணவனுடன் படத்திற்கு சென்ற மாணவி: மதுபானம் கொடுத்து நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
    X

    சக மாணவனுடன் படத்திற்கு சென்ற மாணவி: மதுபானம் கொடுத்து நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

    • சக மாணவருடன் படம் பார்க்க சென்றபோது, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • மது அருந்த வைத்து தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் 3ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி (வயது 22) ஒருவர், கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் இரவு 10 மணிக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் மது அருந்தியுள்ளான். மாணவியை யாரும் இல்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்போது அந்த மாணவியை மது அருந்தும்படி வற்புறுத்தியுள்ளான். தன்னுடன் படிக்கும் சக மாணவன் வற்புறுத்தியதால், அந்த மாணவி மது அருந்தியுள்ளார்.

    இதனால் மாணவி போதை தலைக்கேறி என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு மதிமயங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் தன்னுடைய படிக்கும் மேலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு நண்பரை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளான்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதை தெளிந்த பின்னர், மாணவருடன் சண்டையிட இந்த விசயம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இருந்தபோதிலும், தனக்கு நடத்த கொடூரத்தை, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைமுது சயெ்துள்ளனர்.

    Next Story
    ×