என் மலர்tooltip icon

    இந்தியா

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
    X

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
    • தஞ்சையை சேர்ந்த மணிமாறன் ஓலைச்சுவடிகளை படிக்கும் முறையை இளைஞர்களுக்கு கற்பிக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாடி வருகிறார். தனது 124-வது உரையில் மோடி கூறியதாவது:-

    விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சுபான்ஷூ சுக்லா திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி தொடர்பான உங்களது ஆலோசனைகளை எனக்கு அனுப்பலாம். இந்தியா முழுவதும் குழந்தைகளிடம் விண்வெளி ஆர்வம் பரவி வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு 50-க்கும் குறைவான ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று விண்வெளி துறையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. ஆகஸ்ட் 23-ந் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும்.

    1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ல் ஒரு புதிய புரட்சி தொடங்கியது. சுதேசி இயக்கம் உள்ளூர் தயாரிப்புகளில் குறிப்பாக கைத்தறிகளில் புதிய ஆற்றலை செலுத்தியது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந்தேதி தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுகிறோம்.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். சுய சார்பு மூலம் வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்குவோம். நாட்டின் இளைஞர்கள் சுயமாக தயாரிக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கொண்டு விளையாடும்போது, சுயசார்பு என்ற நோக்கம் எவ்வளவு பலம் பெறும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

    தஞ்சையை சேர்ந்த மணிமாறன் ஓலைச்சுவடிகளை படிக்கும் முறையை இளைஞர்களுக்கு கற்பிக்கிறார். ஓலைச்சுவடிகளில் நமது வரலாறு, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன.

    நடப்பாண்டு பட்ஜெட்டில் ஓலைச்சுவடி எழுத்துக்களை டிஜிட்டல் வடிவமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு புராதன அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×