என் மலர்
இந்தியா

VIDEO: கோமாவில் இருந்து மீண்ட நபர் மருத்துவமனை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
- சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ரூ.1 லட்சம் கேட்டதாக கோமாவில் இருந்த இளைஞர் குற்றச்சாட்டு
- மாநில சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.
மத்திய பிரதேசத்தில் கோமாவில் இருந்ததாக கூறப்படும் நபர் மருத்துவமனை மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரத்லம் நகரில் வசிக்கும் பன்டி நினாமா என்ற இளைஞர் தனியார் மருத்துவமனைக்கு வெளியே, தனக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ரூ.1 லட்சம் கேட்டதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பன்டி நினாமாவின் மனைவி, "எனது கணவர் கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவரின் சிகிச்சைக்காக ரூ.40,000 செலவு செய்திருந்தோம். மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக பணம் கேட்டதால் அதை ஏற்பாடு செய்ய சென்றிருந்தேன். பின்னர் நான் திரும்பி வந்தபோது, கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய என் கணவர் வெளியே கோபமான நிலையில் நின்று கொண்டிருந்தார்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும் மாநில சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.






