என் மலர்
இந்தியா

முர்ஷிதாபாத் வன்முறை திட்டமிடப்பட்டது: பாஜக, எல்லை பாதுகாப்புப்படையால் தூண்டப்பட்டது- மம்தா குற்றச்சாட்டு
- கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன்.
- தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வன்முறையை தடுக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் முர்ஷிபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவினர், மத்திய அமைப்புகள் மற்றும் பாஜக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை எளிதாக்கி பதற்றத்தை தூண்டுகின்றன எனக் குற்றம்சாட்டினார்.
முஸ்லிம் மதத் தலைவர்களுடன் மம்தா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன். இது நாட்டை பிளவுப்படுத்தும். தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.
முர்ஷிதாபாத் கலவரத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த சக்திகளின் பங்கு இருப்பதாகக் எனக்கு செய்திகள் வந்துள்ளன. எல்லையைப் பாதுகாப்பது பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு இல்லையா?. மாநில அரசு சர்வதேச எல்லையை பாதுகாப்பதில்லை. மத்திய அரசு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
வன்முறையின் எல்லைப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து வன்முறையின்போது கற்களை வீசுவதற்கு எல்லை பாதுகாப்புப்படை யாருக்கு நிதியளித்தது என்பதைக் கண்டுபிடிப்பேன்.
அமித் ஷாவை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்.
அமித் ஷா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? அவர் ஒருபோதும் பிரதமராக மாட்டார். பிரதமர் மோடி வெளியேறிய பிறகு அவர் என்ன செய்வார்?. பிரதமர் தனது உள்துறை அமைச்சர் மத்திய நிறுவனங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.






