என் மலர்
இந்தியா
வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
- ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Live Updates
- 23 Nov 2024 8:16 AM IST
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 8 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி 5 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. ஜார்க்கண்ட்டில் பா.ஜ.க. 6 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 3 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.
- 23 Nov 2024 8:03 AM IST
மாகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஜிலேபி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
- 23 Nov 2024 7:17 AM IST
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ராஞ்சி தொகுதி வேட்பாளர் மவுமா மாஜி "மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர்கள் கண்ணில் பார்த்தேன். நான் அவர்களுடைய எதிர்பார்ப்பு, கனவுகளை நிறைவேற்றுவேன்" என்றார்.
- 23 Nov 2024 7:12 AM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படும் காட்சி.
- 23 Nov 2024 7:09 AM IST
வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கும் நிலையில் மும்பா தேவி தொகுதி சிவசேனா வேட்பாளர் ஷைனா என்.சி., ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- 23 Nov 2024 7:07 AM IST
சிவசேனா (UBT) வதாலா தொகுதி வேட்பாளரான ஷ்ரத்தா ஜாதவ் "இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. எங்களுடைய வெற்றி உறுதி. அதை நீங்கள் பார்க்கலாம். மகா விகாஸ் அகாடி ஆட்சி அமைக்கும்" என்றார்.
- 23 Nov 2024 7:00 AM IST
மகாராஷ்டிரா மாநில பாராமதி தொகுதி வாக்குகள் எண்ணப்படும் வாக்குமையத்திற்கு கட்சி முகவர்கள் செல்லக் கூடிய நிலையில் போலீசார் அவர்களை கடுமையாக சோதனையிட்டு அனுப்பினர்.











