என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளா- பிரயாக்ராஜ் பகுதியில் பிப்ரவரி 28 வரை தடை உத்தரவு பிறப்பிப்பு
    X

    மகா கும்பமேளா- பிரயாக்ராஜ் பகுதியில் பிப்ரவரி 28 வரை தடை உத்தரவு பிறப்பிப்பு

    • தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இந்நிலையில் மகா கும்பமேளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில், பிப்ரவரி 28 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    குடியரசு தினம், மௌனி அமாவாசை, பசந்த பஞ்சமி, சந்த் ரவிதாஸ் ஜெயந்தி, மாகி பூர்ணிமா, காதலர் தினம், ஷப்-இ-பாரத், மகாசிவராத்திரி மற்றும் பல்வேறு போட்டிகள் போன்ற பிற விழாக்களைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.

    காவல்துறை மற்றும் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களைத் தவிர, முன் அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடாது.

    பிரயாக்ராஜ் எல்லைக்குள் யாரும் கொடிய ஆயுதம் அல்லது துப்பாக்கியை எடுத்துச் செல்லக்கூடாது.

    எந்தவொரு நபரும் எந்தவொரு தனியார் அல்லது அரசாங்க சொத்துக்களுக்கும் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது.

    எந்தவொரு நபரும் பொது இடத்தில் இடையூறுகளை ஏற்படுத்தவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×