என் மலர்
இந்தியா

மகா கூட்டணி பீகாரில் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும்: ராகுல் காந்தி
- சமூகத்தில் பின்தங்கியவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போன்று நடத்தப்படுகிறார்கள்.
- இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற போலி தடையை காங்கிரஸ் உடைத்தெறியும்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
* மகா கூட்டணி பீகாரில் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடும்.
* பீகார் மக்கள் எப்போதும் நாட்டிற்கான புதியை திசையை காட்டியுள்ளனர். இந்த முறையும் அதேபோன்று புதிய திசையை சட்டசபை தேர்தலின்போது காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
* சமூகத்தில் பின்தங்கியவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போன்று நடத்தப்படுகிறார்கள்.
* இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற போலி தடையை காங்கிரஸ் உடைத்தெறியும்.
* காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பைப் போன்ற சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சி மாதிரியை மாற்றும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.






