search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு
    X

    ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

    • மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
    • ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.

    ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×