என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Live Updates
- 19 April 2024 11:02 AM IST
சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் கருணாகரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
- 19 April 2024 10:57 AM IST
மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநரும் நடிகருமான அமீர் வாக்களித்தார்.
- 19 April 2024 10:54 AM IST
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஜனநாயக கடமை ஆற்றினார்கள்.
#WATCH | Chennai: Tamil Nadu minister and DMK leader Udhayanidhi Stalin along with his wife casts his vote at a polling booth in Chennai#LokSabhaElections2024 pic.twitter.com/FzeoW1sxUd
— ANI (@ANI) April 19, 2024 - 19 April 2024 10:40 AM IST
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாக்களித்தார்.
- 19 April 2024 10:32 AM IST
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களித்தார்.
- 19 April 2024 10:21 AM IST
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் பாரதிராஜா அவரது மகனுடன் வாக்களித்தார்.













