என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    Live Updates

    • 19 April 2024 7:37 AM IST

      சென்னை வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

    • 19 April 2024 7:34 AM IST

      சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் உள்ள மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்களிக்க காத்திருப்பு.

    • 19 April 2024 7:32 AM IST

      சிவகங்கை தொகுதியில் உள்ள கண்டனூர் வாக்குச்சாவடியில் முன்னால் அமைச்சர் ப. சிதம்பரம் வாக்களித்தார்.

    • 19 April 2024 7:29 AM IST

      தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    • 19 April 2024 7:27 AM IST

      தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    • 19 April 2024 7:23 AM IST

      தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வாக்களித்தார்.

    • 19 April 2024 7:19 AM IST

      கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. மகளிர் பள்ளில் 173வது வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தாமதம்.

    • 19 April 2024 7:16 AM IST

      T.R பாலு வாக்களித்தார்.

    • 19 April 2024 7:15 AM IST

      அனைவரும் வாக்களியுங்கள் பிரதமர் மோடி டுவீட்.

    • 19 April 2024 7:12 AM IST

      சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஈ.பி.எஸ். வாக்களித்தார்.

    Next Story
    ×