search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா வேட்பாளருடன் மேடை ஏறிய தலைவர்: அதிரடியாக நீக்கிய மம்தா பானர்ஜி
    X

    பா.ஜனதா வேட்பாளருடன் மேடை ஏறிய தலைவர்: அதிரடியாக நீக்கிய மம்தா பானர்ஜி

    • தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.
    • பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ். இவர் பா.ஜனதா வேட்பாளருடன் மேடையில் தோன்றியதுடன், அவரை பாராட்டி பேசியுள்ளார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குணால் கோஷை மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுளள்து.

    கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குணால் கோஷ், கடந்த மாதம் செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்ய விருப்பும் தெரிவித்திருந்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருடைய செய்தி தொடர்பாளர் பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது. மற்ற பதவிகளில் நீடிக்க கேட்டுக் கொண்டது.

    இருந்த போதிலும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவரது அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தாவின் வடக்கு தொகுதியின் சுதிப் பந்தோபாத்யாய் பேரணியில் குணால் கோஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பா.ஜனதா வேட்பாளர் தபாஸ் ராய் நடத்திய ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குணால் கோஷ் பேசும்போது "தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும், பதவியை தக்கவைக்க எந்த விதமான நேர்மையற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் நான் நம்புகிறேன். மக்கள் அவர்களுடைய வாக்குகளை சுதந்திரமாக வாக்களிக்கட்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×