என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மந்திரி தகவல்
    X

    பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மந்திரி தகவல்

    • பல்வேறு கல்வித் திட்டங்களுக்காக மத்திய அரசு 1466 கோடி ரூபாய் வழங்காமல் உள்ளது.
    • இந்த நிதியை பெறுவதற்காக பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக மந்திரி தகவல்.

    இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்று கேரளா. இயற்கை பேரிடர், மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஆகியவற்றில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக கேரள மாநில அரசு, மத்திய அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    SIR போன்றவற்றில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலையை கொண்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி திட்டங்களையும் ஏற்றதில்லை.

    இந்த நிலையில் பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக, கேரள மாநில பொது கல்வித்துறை மந்திரி வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    "மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தகுதியானவர். இதனால் கேரளா இதில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய தேவையில்லை. கேரள அரசின் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு 1466 கோடி ரூபாய் வழங்காமல் இருக்கிறது. கேரள மாநில குழந்தைகள் இந்த நிதியை பெற தகுதியானவர்கள்.

    நிலுவையில் உள்ள நிதியை பெறுவதற்காக மட்டுமே இந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. நிதியை பெற்றால் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியும். 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சுமூகமாக சம்பளம் வழங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

    எழுச்சி இந்தியாவுக்கான பிரதமர் பள்ளிக் கூடங்கள் {PM Schools for Rising India (PM SHRI)} திட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாகும்.

    இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகளை இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளார்.

    Next Story
    ×