என் மலர்
இந்தியா

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று வெளிநாடு பயணம்
- 12-ந் தேதி வாஷிங்டனில், உலக வங்கி தெற்கு ஆசிய துணை தலைவரை சந்திக்கிறார்.
- 14-ந் தேதி நியூயார்க்கில் இருந்து கியூபா செல்கிறார்.
திருவனந்தபுரம் :
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) வெளிநாடு புறப்படுகிறார். இவர் அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 10-ந் தேதி அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் நடைபெறும் உலக கேரள சபை மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். 11-ந் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல்-மந்திரி பினராயி விஜயன், அமெரிக்காவில் மலையாளி முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.
12-ந் தேதி வாஷிங்டனில், உலக வங்கி தெற்கு ஆசிய துணை தலைவரை சந்திக்கிறார். 13-ந் தேதி மேரிலேண்ட் செல்கிறார். 14-ந் தேதி நியூயார்க்கில் இருந்து கியூபா செல்கிறார். கியூபாவில் 15, 16 ஆகிய 2 நாட்கள் பல்வேறு நிகழ்சிகளில் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். முதல்-மந்திரியுடன் அவருடைய மனைவி கமலா, உதவியாளர் வி.எம். சுனீஷ், மந்திரிகள் கே.என். பாலகோபால், வீணா ஜார்ஜ் சபாநாயகர் சம்சீர், தலைமை செயலாளர் வி.பி. ஜாய் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் உடன் செல்கிறார்கள். முதல்-மந்திரி மற்றும் குழுவினர் 17-ந் தேதி கேரளா திரும்புகின்றனர்.






