என் மலர்tooltip icon

    இந்தியா

    வாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வீதியில் ஆட்டம் போட்ட 14 சிறுவர்கள் உள்பட 19 பேர் கைது
    X

    பயங்கர ஆயுதங்களுடன் நடனமாடியவர்கள் கைது

    வாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வீதியில் ஆட்டம் போட்ட 14 சிறுவர்கள் உள்பட 19 பேர் கைது

    • ரீமிக்ஸ் பாடலை போட்டு பொதுவெளியில் ஆட்டம் போட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.
    • சிறார் குற்ற சட்ட விதிகளின்படி நடவடிக்கை என போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    மிலாது நபி கொண்டாட்டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலர், இந்து மதம் குறித்து தெலுங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய ரீமிக்ஸ் பாடலை போட்டு சாலையில் ஆட்டம் போட்டுள்ளனர்.

    கைகளில் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வளைதளங்களில் பகிரப்பட்டது. இவற்றை பார்த்த பெங்களூரு சித்தாபுரா பகுதி போலீசார், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் 14 சிறுவர்கள் உட்பட 19 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 14 சிறுவர்கள் மீதும் சிறார் குற்றத் தடுப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சித்தாபுரா காவல் நிலையம் முன்பு திரண்டு தங்கள் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×