search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா என்பது டி.கே. சிவகுமார் குடியரசு அல்ல: குமாரசாமி கடும் விமர்சனம்
    X

    "கர்நாடகா" என்பது டி.கே. சிவகுமார் குடியரசு அல்ல: குமாரசாமி கடும் விமர்சனம்

    • ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாட்டை காங்கிரஸ் கவனிக்கவில்லை- குமாரசாமி.
    • வாக்குறுதிகளுக்கும் குமாரசாமிக்கும் இடையே உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்- டி.கே. சிவகுமார்.

    கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்து, தொடங்கி வைத்தது.

    இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, "அருகில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கர்நாடகாவில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகளை அவர்கள் கவனிக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கு துணை முதல்வர் சிவகுமார் "குமாரசாமிக்கும் ஐந்து வாக்குறுதிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு மதர்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் "டுப்ளிகேட் துணை முதல்வர் (Duplicate Chief Minister) மிகவும் கோபப்படுகிறார். அதிகமான கோபம் உடல் நலத்திற்கு மோசமானது. இந்த எச்சரிக்கையை அவர் நினைவில் வைத்துக் கொண்டால், நல்லது. குமாரசாமிக்கும் உத்தரவாதங்களுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கிறது என்று ஞான முத்துக்களை வழங்கியுள்ளார். பித்தம் தலைக்கேறி, மூளை செயலிழக்கும்போது, ஒருவர் இப்படி பேசுகிறார்" பதிலடி கொடுக்கப்பட்டது.

    குமாரசாமி கூறுகையில் "இது கர்நாடகா. கர்நாடகா என்பது டி.கே. சிவகுமார் குடியரசு அல்ல. ஜனநாயகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளன. கேள்விகள் கேட்பதற்காக மக்கள் எனக்கு எதிர்க்கட்சி பதவியை கொடுத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×