search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    Live Updates

    • 13 May 2023 12:50 PM GMT

      சிதாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியன்க் கார்கே பாஜக வேட்பாளர் ரத்தோட்-ஐ 13 ஆயிரத்து 640 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    • 13 May 2023 12:36 PM GMT

      சிக்பல்லாபூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதீப் ஈஷ்வர், மாநில அமைச்சர் மற்றும் பாஜக வேட்பாளர் கே சுதாகரை 10 ஆயிரத்து 642 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • 13 May 2023 12:27 PM GMT

      சாம்ராஜ்பெட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சமீர் அகமது கான் முன்னாள் காவல் துறை ஆணையரும், பாஜக வேட்பாளருமான பாஸ்கர் ராவை 53 ஆயிரத்து 953 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • 13 May 2023 12:21 PM GMT

      கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. பாஜக-வினரின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். வரும் காலங்களில் கர்நாடகாவுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம், ” என்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

    • 13 May 2023 12:12 PM GMT

      கர்நாடகாவில் வெற்றி உறுதியான நிலையில், பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • 13 May 2023 11:42 AM GMT

      கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி, மேலும் 22 இடங்களில் முன்னணியில் உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு. கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    • 13 May 2023 11:29 AM GMT

      கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 33 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாஜக 50 இடங்களில் வெற்றி, 14 இடங்களில் முன்னணியில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • 13 May 2023 11:26 AM GMT

      “நாங்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக இருந்து கர்நாடக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் காந்தி கூறினார். மக்கள் அவரிடம் ஜனநாயகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டறிந்து கொள்ள வேண்டும்,” என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

    • 13 May 2023 11:15 AM GMT

      கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இருக்கும் நிலையில், “தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,” என்று கர்நாடக மாநிலத்துக்கான பாஜக தலைவர் நலின் குமார் கடீல் தெரிவித்தார்.

    • 13 May 2023 11:10 AM GMT

      கர்நாடக தேர்தலில் பாஜக சார்பில் மல்லேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.என். அஷ்வத்நாராயணன், “கர்நாடகாவில் இது எங்களுக்கு பின்னடைவு தான். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் மேலும் கடினமாக உழைத்து, மக்களின் நன்மதிப்பை பெறுவோம். 2024 தேர்தலில், 28 இடங்களிலும் எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். 

    Next Story
    ×