என் மலர்
இந்தியா

கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பெண் மீது ஏறிய நாகப்பாம்பு
- கலபுரகி மாவட்டம் மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா.
- இவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது.
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா. இவர் அப்பகுதியில் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் வேலை செய்த களைப்பில் விவசாய நிலம் அருகே உள்ள மரத்தின் கீழ் கட்டிலில் படுத்து இருந்தார்.
அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரின் காது அருகே 'புஷ், புஷ்' என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகம்மா, சில நிமிடங்கள் அசைவில்லாமல் அப்படியே படுத்துக் கொண்டார்.
அதையடுத்து அந்த பாம்பு அவர் மேல் இருந்து இறங்கி புதருக்குள் சென்றுவிட்டது. இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






