என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா மீதான 50% வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பாதிப்பு?.. என்ன காரணம்?
    X

    இந்தியா மீதான 50% வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பாதிப்பு?.. என்ன காரணம்?

    • நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
    • மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகிறது.

    அதன்படி இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதமும் நிலவி வருகிறது.

    50சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் பெரிய சந்தையை கொண்டுள்ள அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கக்கூடும்.

    சுதந்திர போராட்ட சமயத்தில் இந்தியரகள் கையில் எடுத்த சுதேசி இயக்கம், நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.

    இந்த சூழலில் அமெரிக்க வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, சுதேசி பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து சமீப காலங்களில் மேடை தோறும் பேசி வருகிறார்.

    அதன்படி அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்கொள்ள இத்தகு அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    உலகிலேயே அதிக (145 கோடிக்கும் அதிகமான) மக்கள் தொகை இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது அந்நாட்டுக்கு பேரிழப்பாகும்.

    வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட் உடைய மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.

    இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் 4,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்த பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பது அந்நிறுவனங்களின் மீதான அழுத்தமாக மட்டுமல்லாமல் அமெரிக்க பொருளாதரத்தின் மீதான மறைமுக தாக்கமாக மாறக்கூடும்.

    Next Story
    ×