என் மலர்
இந்தியா

லஞ்ச வழக்கில் IRS அதிகாரி வீட்டில் சோதனை.. 3.5 கிலோ தங்கம், ரூ.1 கோடி பணம் பறிமுதல்
- ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.25 லட்சத்தை முதல் தவணையாக பெற்றுள்ளார்.
- 25 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு லாக்கரின் ஆவணங்கள் கிடைத்தன.
டெல்லி வருமான வரித்துறையில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் ஐஆர்எஸ் அதிகாரி அமித் குமார் சிங்கால்.
இவர் ஒருவரிடம் ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.25 லட்சத்தை முதல் தவணையாக பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக கிடைத்த புகாரின்பேரில் லஞ்சம் வாங்கும்போது அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை சிபிஐ மடக்கிப்பிடித்து கைது செய்தது.
இந்நிலையில் டெல்லி, மொஹாலி, மும்பை மற்றும் பஞ்சாபில் ஆகிய மாநிலங்களில் அதிகாரி அமித் குமாருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.
இதில், இந்த இடங்களில் இருந்து சுமார் 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர, 25 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு லாக்கரின் ஆவணங்கள், டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபில் உள்ள பல சொத்துக்களின் ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
Next Story






