என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில் கிட்சனில் உலாவிய எலிகள்: அதிர்ச்சி வீடியோ வைரல்
    X

    ரெயில் கிட்சனில் உலாவிய எலிகள்: அதிர்ச்சி வீடியோ வைரல்

    • வீடியோவில் 2 எலிகள் பயணிகளுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து சாப்பிடுகிறது.
    • எலிகள் காய்கறிகள் நறுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களில் அங்கும் இங்கும் ஓடுகிறது.

    இந்தியாவில் நீண்ட தூரம் செல்ல கூடிய ரெயில்கள் அனைத்திலும் பயணிகளுக்கு உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவா செல்லக்கூடிய லோக்மான்ய திலக் டெர்மினஸ் மட்கான் ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிட்சனில் எலிகள் உணவை சாப்பிடுவது போன்று ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    மன்கிரிஷ் தெண்டுல்கர் என்ற பயணி எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில் ரெயிலின் எண் மற்றும் பெயரை காட்டுகிறார். அந்த வீடியோவில் 2 எலிகள் பயணிகளுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து சாப்பிடுகிறது.

    இந்த எலிகள் காய்கறிகள் நறுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களில் அங்கும் இங்கும் ஓடுகிறது. இதனை பார்த்த பயணிகள், பொதுமக்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்து ஒரு டுவிட் செய்துள்ளனர். அதில், இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் சமையலறையில் சுகாதாரம் மற்றும் தூய்மையை உறுதி செய்ய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×