என் மலர்
இந்தியா

iPhone 11 மோகம்: 17 வயது சிறுவனை கொலை செய்த நண்பன் -பஞ்சாபில் பகீர் சம்பவம்
- அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது
- உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் வைத்திருந்த ஐபோன் 11க்காக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நவ்ஜோத் சிங். மார்ச் 24 அன்று நவ்ஜோத்தின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 அன்று தனது நண்பர்களுடன் ஹரித்வார் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து தான் ஹரித்வார் செல்லவில்லை என்றும், மீண்டும் வீட்டுக்கு திரும்புவதாகவும் பெற்றோரிடம் போன் செய்து கூறியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
அதே இரவு ரயில் நிலையத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மார்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடலை அடையாளம் காண முடியவில்லை.
உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மார்ச் 30 அன்று, ஹர்ஜிந்தர் சிங் தனது மகனைத் காணவில்லை என போலீசிடம் சென்றுள்ளார். அதன்பின் அந்த உடல் நவ்ஜோத் சிங் உடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், நவ்ஜோத் அவரது நண்பர் அமன்ஜோத்தால் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர். காரணம் நவ்ஜோத்தின் ஐபோன்-11. நவ்ஜோத்தை கொலை செய்து மற்றொரு நண்பன் உதவியுடன் உடல் ரெயில் பாதையில் கிடத்தப்பட்டுள்ளது. நவ்ஜோத்தின் மொபைலை அமன்ஜோத்திடமிருந்து போலீசார் மீட்டனர். அமன்ஜோத் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






