என் மலர்
இந்தியா

அஜித் பவாருக்கு அடுத்தது யார்? எனப் பேசுவது மனிதாபிமானமற்றது: சஞ்சய் ராவத்
- தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் காலமானார்.
- அவரது கட்சியை வழி நடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று முன்தினம் விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பிளவுப்படுத்தி பின்னர் அதை தனதாக்கிக் கொண்டவர் அஜித் பவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு சரத் பவார் கட்சியையும், தனது கட்சியையும் ஒன்றிணைக்க அஜித் பவார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா (UBT) கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் தலைமைத்துவம் குறித்து பேசுவது மனிதாபிமானமற்ற செயல். இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்கள் மனிதாபிமானற்றவர்கள். அது எம்.எல்.ஏ.-வாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் சரி. அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தனது கணவரை இழந்துள்ளார். அவரது கண்கள் இன்னும் கலங்கி கொண்டிருக்கின்றன.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சுனேத்ரா பாராமதி தொகுதியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.






