என் மலர்
இந்தியா

துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் இண்டிகோ..!
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
- இந்தியாவில் செயல்படும் துருக்கி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதால், இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இந்தியா திறமையாக செயல்பட்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. இருந்தபோதிலும் ஒன்றிரண்டு டிரோன்கள் குடியிறுப்புகளை தாக்கியது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை மட்டுமே இந்தியா தாக்கியது. ஆனால், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. என்றபோதிலும் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. டிரோன்கள் அதிக அளவில் வழங்கியது.
இதனால் இந்தியாவில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலைங்களில் செய்பட்டு வந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இண்டிகோ நிறுவனத்தினம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இண்டிகோ இரண்டு போயிங் 777s விமானங்களை துருக்கி ஏர்லைன்சிடம் இருந்து குத்தகைக்கு பெற்று இயக்கி வருகிறது. மே 31ஆம் தேதி வரை இந்த குத்தகைக்கான அவகாசம் உள்ளது. ஆனால், இண்டிகோ நிறுவனம் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதி கேட்டுள்ளது. ஆனால், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
இருந்தபோதிலும் உடனடியாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால், 3 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு தி்ட்டவட்டமாக தெரிவித்துள்ளது.






