என் மலர்
இந்தியா

ஈரானுக்கான அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்: இந்திய மக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
- ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது.
- போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டு பணத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இதனால விலைவாசி அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்று ஈரானி உச்சபட்ச தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரானுக்கான அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்ற இந்திய மக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் "சமீப நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஈரானில் தற்போதுள்ள இந்திய மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பேராட்டம் அல்லது வன்முறை நடைபெறும் பகுதியை தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைய தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக கவனிக்கவும்" எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் இருப்பிட விசாவுடன் வசித்து வருபவர்கள், இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை என்றால், பதிவு செய்து கொள்ளவும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், 31 மாகாணத்தில் 25 மாணாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.






