என் மலர்
இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி
- ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது
- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். காயடைந்தோர் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.






