என் மலர்
இந்தியா

மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 100 மாவட்டங்களில் சுதந்திரமான தீபாவளி கொண்டாட்டம்: பிரதமர் மோடி
- நக்சலைட், மாவோயிஸ்ட் ஆதிக்கம் 100 மாவட்டங்களில் இருந்து 11 மாவட்டங்களாக குறைந்துள்ளது.
- 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் உள்ளன.
பிரதமர் மோடி இன்று ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
அப்போது படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
கடந்த சில வருடங்களில் பாதுகாப்புப்படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தால், இந்தியா மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது.
இந்தியா நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுதலையின் விளிம்பில் உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக 125 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் எண்ணிக்கை தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளன. 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதன்முறையாக சுதந்திரமான காற்றை சுவாசித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






