என் மலர்
இந்தியா

செனாப் நதிநீர் பாகிஸ்தானுக்குள் செல்வதை தடுத்து நிறுத்திய இந்தியா.. ஜீலம் நதிநீரையும் திசை திருப்ப முடிவு
- இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது.
- பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி யதற்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று இந்தியா கூறி வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க படைகளை இந்தியா தயார் படுத்திக் கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தானியர்களை வெளியேற்றிய இந்தியா சிந்துநதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா அதற்காக பாகிஸ்தானை தண்டிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்தி உள்ளது. 2 பெரிய அணைகளில் செனாப் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அதிக தண்ணீர் வழங்கும் ஜீலம் நதி தண்ணீரையும் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த நதியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண கங்கா அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்க இந்தியா முடிவு செய்து உள்ளது.
அப்படி தேங்கும் தண்ணீரை மாற்று பகுதி வழியாக இந்திய பகுதியில் வெளியேற்ற மத்திய நீர் பாசன துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாகிஸ்தான் விவசாயத்தை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளையும் இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்து உள்ளது. இதனால் பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்கள் கடும் இழப்பை சந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். அவை அனைத்தும் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் முதல் ஓரிரு நாட்களில் பாகிஸ் தான் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா போன்ற நாடுகளின் துணையுடன் தனது பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. இந்திய அரசு அதையும் கண்டுபிடித்து தடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






