search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொஞ்சம் உஷாரா இருங்க.. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    X

    கொஞ்சம் உஷாரா இருங்க.. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    • உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும்.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் துவங்கியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிக்கையில், "இஸ்ரேல் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் கவனமாகவும், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

    "கூடுதல் விவரங்களுக்கு, இஸ்ரேலி ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் வலைதளம் https://www.oref.org.il/en அல்லது தயார்நிலை கையேடை பாருங்கள். அவசர உதவிக்கு எங்களை +97235226748 என்ற எண்ணிற்கோ அல்லது consl.telaviv@mea.gov.in என்ற இணைய முகவரியிலோ தகவல் தெரிவிக்கலாம். தூதரக அதிகாரி இதர தகவல்களை வழங்க எப்போதும் தயார் நிலையில் இருப்பார்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×