search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி மனிதாபிமானமிக்கவர்- குலாம் நபி ஆசாத்
    X

    குலாம்நபி ஆசாத்

    பிரதமர் மோடி மனிதாபிமானமிக்கவர்- குலாம் நபி ஆசாத்

    • கேள்விகளை எழுப்புவதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டது.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தலைவர்கள் கடிதம் எழுதியதில் இருந்து அவர்களுக்கு ( தலைமைக்கு) என்னுடன் ஒரு பிரச்சினை உள்ளது. கடிதம் எழுதுவதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் 6 நாட்கள் நான் தூங்கவில்லை. நாங்கள் கட்சிக்கு ரத்தத்தை கொடுத்து உழைத்தோம்.

    தங்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் விரும்பவில்லை. பல (காங்கிரஸ்) கூட்டங்கள் நடந்தன, ஆனால் ஒரு பரிந்துரை கூட பரிசீலிக்கப்படவில்லை. அமைப்பை சரியாக அமைப்பதற்கு தலைமைக்கு நேரமில்லை.

    கட்சியில் முன்னிறுத்தப்படும் தலைவர்கள், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக கட்சியை விட்டு வெளியேறச் செய்கிறார்கள். கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டதால், அந்த அமைப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம். அதனால்தான் நாங்கள் அதில் இருந்து விலக முடிவு செய்தோம்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை, இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கு உரியது. தனிப்பட்ட முறையில் அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரை (ராகுல் காந்தியை) வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். அவருக்கு ஆர்வம் இல்லை.

    பிரதமர் மோடி ஒரு மோசமான மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான். இன்று என்னுடைய சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

    பாஜகவில் சேரமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×