என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 26, 27-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை
    X

    கேரளாவில் 26, 27-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை

    • திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 26-ந்தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும்.

    திருவனந்தபுரம்:

    வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் தாக்கத்தால் கேரளாவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 26-ந் தேதி மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளில் 26, 27-ந் தேதிகளில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும்.

    எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கேரளாவில் ஒன்று அல்லது 2 இடங்களில்7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×