என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் போலீஸ் வேலைக்கு தேர்வான சுவாரஸ்யம்
    X

    ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் போலீஸ் வேலைக்கு தேர்வான சுவாரஸ்யம்

    • டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.
    • மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். யஷ்பாலின் மூத்த மகன் ஷேகர் (21) இவர் கடந்த 2½ ஆண்டுகளாக போலீஸ் வேலைக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். மகனின் ஈடுபாட்டை பார்த்து தானும் போலீஸ் வேலைக்கு படித்தால் என்ன என்று, தந்தை யஷ்பாலும் போலீஸ் வேலைக்கு தன்னை தயார் செய்ய தொடங்கினார்.

    எஸ்.சி. பிரிவின் கீழ் வயது தளர்வு பெற்று, மேலும் முன்னாள் ராணுவ வீரராக இருந்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான மறு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வில் பங்கேற்கவும் அனுமதி பெற்றார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு 60 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான தேர்வும் நடந்தது. இந்த தேர்வை தந்தை யஷ்பாலும், மகன் ஷேகரும் எழுதினர். தேர்வு முடிவுகள் தந்தை மகன் இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை தந்தது. தேர்வில் இருவரும் வெற்றி பெற்றனர். இது அந்த கிராமத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பணி ஆணையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமிருந்து இருவரும் பெற்றனர்.

    இதுகுறித்து தந்தை யஷ்பால் கூறியதாவது:-

    கடந்த 2½ ஆண்டாக என் மகனுடன் சேர்ந்து போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தேன். டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.

    அன்றாடம் நூலகத்திற்கு நானும் மகனும் சேர்ந்தே சென்று எங்களை தயார் படுத்தினோம். ஆனால் நாங்கள் தந்தை மகன் என்று யாருக்கும் தெரியாது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக போலீஸ் சூப்பிரண்டு ஞானஜெய் சிங்கிடம் வாழ்த்து பெற சென்ற போது அவரிடம் உண்மையை சொன்னேன்.

    தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது எல்லோருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என அவர் எங்களை ஊக்குவித்தார். நானும் மகனும் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×