ஆகஸ்டு மாத GST ரூ.1.86 லட்சம் கோடி வசூல்

கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.
ஆகஸ்டு மாத GST ரூ.1.86 லட்சம் கோடி வசூல்
Published on

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.

மாதந்திர ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது. மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.

இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.5 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com