search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லியில் நாளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் பேரணி
    X

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லியில் நாளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் பேரணி

    • 2004-ம் ஆண்டு ஜனவரில் இருந்து புதிய பென்சன் திட்டம்
    • நாளை ராம்லீலா மைதானத்தில் மெகாபேரணி

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் பேரணிநடத்த உள்ளனர். இந்த பேரணி நாளை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பு/தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஆகியவை இந்த பென்சன் உரிமை மகாபேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய ரெயில்வே ஆண்களுக்கான பெடரேசன் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறுகையில் ''2014-ம் ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். நாளை காலை 9.30 மணிக்கு பேரணி நடைபெறும்'' என்றார்.

    மத்திய, மாநில, ரெயில்வே, ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    Next Story
    ×