என் மலர்
இந்தியா

ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட தடைகளை ஏற்படுத்தும் பாஜக அரசு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
- நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.
ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.
நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.
நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.






