என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி இரு மடங்காக உயர்வு
- தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது.
- சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது.
புதுடெல்லி:
தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில், தங்க இறக்குமதி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருமடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது. அது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 84 ஆயிரத்து 296 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இரு மடங்கிற்கும் கூடுதலாகும்.
சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து 16 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.