என் மலர்
இந்தியா

'எல்லாப் பிரச்னைகளுக்கும் ஸ்ரீராம், ஜெய்ராம் சொல்லுங்கள்... எல்லாம் சரியாகிவிடும்' - பாஜக எம்பி அஜய் பாட்
- பசு பால் கொடுக்கவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்
- மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் மத்திய அரசு பல மசோதாக்களை தாக்கல் செய்து, அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, 'விபி-ஜி ராம் ஜி' என்னும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.
முன்னதாக, இந்த "விபி-ஜி ராம் ஜி மசோதா" நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தரகண்ட் நைனிடால் மக்களவை உறுப்பினர் அஜய் பட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மசோதா தொடர்பாக பேசிய அஜய் பாட், "ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் பிரச்சனை இருந்தால், கணவன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கொடுக்கவில்லை என்றால், "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என்று சொன்னால் போதும், அது நிறைவேறும்." என தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், மசோதா கொண்டுவரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






