என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. முன்னாள் எம்.பி காங்கிரசில் இணைந்தார்
    X

    பா.ஜ.க. முன்னாள் எம்.பி காங்கிரசில் இணைந்தார்

    • பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான சுதாகர் ஷ்ரங்காரே காங்கிரசில் இணைந்தார்.
    • கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.

    அங்கு மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளன.

    மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காஙகிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சுதாகர் ஷ்ரங்காரே இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    முன்னாள் அமைச்சர்களான திலிப்ராவ் தேஷ்முக் மற்றும் அமித் தேஷ்முக் ஆகியோர் முன் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    லத்தூர் தொகுதி முன்னாள் எம்.பி.யான இவர் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×