என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
    X

    ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

    • ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம் என ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

    இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.

    அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×