என் மலர்tooltip icon

    இந்தியா

    விரைவில் 100 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள்-  தலைமை தேர்தல் ஆணையர்
    X

    விரைவில் 100 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

    • நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
    • தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

    * வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

    * நாம் 99 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையை கடந்த கொண்டிருக்கிறோம்.

    * பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 48 கோடியை எட்டியுள்ளது.

    * நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.

    * டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்.

    * குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    * வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது.

    * ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    * தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    * 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

    * படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது என்றார்.

    Next Story
    ×