search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிரவ் மோடியின் ரூ. 253 கோடி அசையும் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
    X

    நிரவ் மோடி

    நிரவ் மோடியின் ரூ. 253 கோடி அசையும் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

    • லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள ரூ. 250 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    மும்பை:

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பினார்.

    லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி ஹாங்காங்கில் போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டெபாசிட் என பதுக்கி வைத்திருந்த ரூ.253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

    Next Story
    ×