என் மலர்
இந்தியா

சட்ட விரோத பண பரிவர்த்தனை: அரியானா, ராஜஸ்தானில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- லாரன்ஸ் பிஷ்னோய் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் பஞ்சாபை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லரன்ஷ் பிஷ்னோய் மற்றும் கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.
அரியானா, ராஜஸ்தானில் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
Next Story






