என் மலர்tooltip icon

    இந்தியா

    இறுதிப் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பாஜக- ECI கூட்டணி திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
    X

    இறுதிப் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பாஜக- ECI கூட்டணி திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

    • உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர்.
    • அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

    இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடி பேரை நீக்க பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி முடிவு செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஒருதலை பட்சமாகவும், தேர்தல் பவுதி அதிகாரிகள் (EROs) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், SIR நடவடிக்கையின்போது, வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டனர். உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர். அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், தங்களது பெயரை உறுதி செய்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்தபடியே, பாஜக-வால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பெயர்களை நீக்கியது. இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், SIR தரவுகளில் உள்ள பெயர்ப் பொருத்தமின்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டன. திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றிய பெண்களின் பெயர்களை அவர்கள் நீக்கிவிட்டனர்.

    பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×