என் மலர்
இந்தியா

தேர்தல் தோல்வியை மூடி மறைக்கவே., ராகுல் காந்திக்கு எதிராக 272 முக்கியதஸ்ர்கள் ECI-க்கு கடிதம்
- பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- தேர்தல் தோல்வி விரக்கியதால் குற்றச்சாட்டு என முக்கியஸ்தர்கள் கடிதம்.
காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டசபை தேர்தல் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதேவேளையில் பாஜக-வின் வெற்றிக்கு வாக்கு திருட்டுதான் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவி செய்து வருகிறது என ராகுல் காந்தி தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்.
ஆதாரங்களுடன் குற்றம்சாட்டிய நிலையிலும், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக 272 முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறார்" கையொப்பமிட்டு குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 272 பேர் கையொப்பமிட்டு உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் மூத்த அதிகாரிகள் யாரும் கையொப்பமிடவில்லை.
16 நீதிபதிகள் 123 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 133 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், ஹேமந்த் குப்தா உள்ளிட்ட வரும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.






