என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
கர்ப்பிணியை கற்பழித்த ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு தலைவர்- கைது
- கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலை நேரத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்கு ஷியாம் குமார் (வயது29) என்ற வாலிபர் வந்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் பிரிவு தலைவரான இவர், கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்பு அந்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண், போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து வாலிபர் ஷியாம் குமார் மீதுபுலிகேசு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை இன்ஸ்பெக்டர் அஜீப் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
நாகாலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் தும்பா பகுதியில் ஒரு ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த அனீஷ்(25) என்ற வாலிபர் மானபங்கம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பெண்ணை கீழே தள்ளி தாக்கிவிட்டு வாலிபர் தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணிடம் நடுரோட்டில் அத்துமீற முயன்ற அனீசை கைது செய்தனர்.