என் மலர்

  இந்தியா

  பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழைய கட்டிடத்தில் நேற்றோடு பாராளுமன்ற அலுவல் பணிகள் முடிவடைந்தன
  • புதிய கட்டிடத்தில் இன்றுமுதல் பாராளுமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது

  டெல்லியில் செயல்பட்டு வந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக விடை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த பாராளுமன்றம் கட்டப்பட்டது. 97 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த கட்டிடத்தில் போதிய அறைகள் இல்லாமல் நெருக்கடிகள் ஏற்பட்டதால் புதிய பாராளுமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி பழைய பாராளுமன்றம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்த பிறகு பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடங்கின.

  நேற்று பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியதும் பாராளுமன்றத்தில் 75 ஆண்டு கால பயணம் பற்றி தலைவர்களை பழைய சம்பவங்கள் நினைவு கூர்ந்து பேசினார்கள். இன்று காலை 9.15 மணிக்கு எம்.பி.க்கள் அனைவரும் பழைய பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடினார்கள்.

  9.30 மணிக்கு பழைய பாராளுமன்ற கட்டிடம் முன்பு எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். 10.15 மணி வரை அனைத்து கட்சி எம்.பி.க்களும் அங்கு ஓரணியாக நின்று பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்புகளை நினைவு கூறினர்.

  இதையடுத்து 11 மணிக்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடந்தது. இதற்காக 10.50 மணிக்கே மைய மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி எம்.பி.க்கள் மத்தியில் சென்று கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றி கூறினார்.

  எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று பிரதமர் மோடிக்கு பதில் வணக்கம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, காஷ்மீர் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய இருவரையும் கையை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்து பேசினார்.

  சில எம்.பி.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்து சிரித்து பேசினார். பின்னர் பா.ஜ.க. மூத்த மந்திரிகளிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டு இருந்தார். சரியாக 11 மணிக்கு மைய மண்டபத்தில் கூட்டம் தொடங்கியது. இதையொட்டி மைய மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

  மேடையில் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சபாநாயகர் ஓம்பிர்லா அமர்ந்து இருந்தனர். பழைய பாராளுமன்ற கட்டிடத்தை நினைவு கூர்ந்து எம்.பி.க்கள் பேசினார்கள். மேனகா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, பியூஸ்கோயல், கார்கே ஆகியோர் பேசி முடித்ததும் பிரதமர் மோடி பேசினார்.

  அத்துடன் பழைய பாராளுமன்றத்துக்கு இறுதி விடை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு எம்.பி.க்கள் அனைவரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு புறப்பட்டு சென்றனர். நெகிழ்ச்சியுடன் அவர்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து பிரிந்து சென்றனர்.

  Next Story
  ×