என் மலர்
இந்தியா

திணறும் டெல்லி- அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசு
- ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
- டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று (டிசம்பர் 29, 2025) காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானது.
இது, டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு இன்று காலை 400-ஐத் தாண்டி, 'மிகவும் மோசம்' (Very Poor) என்பதிலிருந்து 'கடுமையான' (Severe) நிலைக்குச் சென்றுள்ளது.
ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. தொடர்ந்து, அசோக் விகார், ஜஹாங்கீர், புதுடெல்லி ஆகிய இடங்களில் 400க்கு மேல் தாண்டி கடுமையானது நிலையை எட்டியுள்ளது.
டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் பார்வைத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் அதிகாலையில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் இந்த நிலை வரும் ஜனவரி 1-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.






