என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் 8-வது நாளாக காற்றின் தரம் மோசம்: பொதுமக்கள் கடும் அவதி
    X

    டெல்லியில் 8-வது நாளாக காற்றின் தரம் மோசம்: பொதுமக்கள் கடும் அவதி

    • டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
    • சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கு காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது.

    இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.

    இதற்கிடையே அடுத்த 6 நாட்களுக்கு டெல்லியின் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமான' முதல் 'கடுமையான' மண்டலத்தில் இருக்கும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. வாகன மாசு, பயிர் கழிவுகள் எரிப்பு, குளிர்காலம் ஆகியவை டெல்லியில் காற்றுமாசுக்கு காரணமாக உள்ளது.

    காற்று மாசு காரணமாக டெல்லியில் சுமார் 80 சதவீத வீடுகளில் கடந்த மாதத்தில் குறைந்தது ஒருவராவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 36 சதவீத வீடுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுவாசம் அல்லது மாசுபாடு தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×