என் மலர்
இந்தியா

கட்டிட விபத்து
டெல்லியில் சோகம் - கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பலி
- கட்டிட விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தஹு.
இந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன.
நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story