என் மலர்
இந்தியா

திருப்பதி ரெயில், பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி நடைபாதைக்கு 20 இலவச பஸ்கள் இயக்க முடிவு
- பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது.
- நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது.
திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் மலைக்கு நடந்து வருகின்றனர்.
திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் இருந்து நடைபாதைக்கு ஆட்டோ, கார், வேன் மூலம் வரும் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது. பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைக்கு இலவசமாக பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த செய்தி நடைபாதை பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் நேற்று 83,380 பேர் தரிசனம் செய்தனர். 27,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது. இன்று காலை பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.






