என் மலர்tooltip icon

    இந்தியா

    நீதித்துறையில் ஊழல் பாட விவகாரம் - பாடத்திட்ட குழுத்தலைவர் உட்பட 3 பேராசிரியர்கள் பணிசெய்யத் தடை
    X

    'நீதித்துறையில் ஊழல்' பாட விவகாரம் - பாடத்திட்ட குழுத்தலைவர் உட்பட 3 பேராசிரியர்கள் பணிசெய்யத் தடை

    • விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியது.
    • பாடத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் அனைத்தும் அரசு அளித்த தகவல்களில் இருந்தே எடுக்கப்பட்டது.

    8-ஆம் வகுப்பு NCERT சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" (Corruption in the Judiciary) என்ற தலைப்பில் பாடம் சேர்த்த விவகாரத்தில், தொடர்புடைய பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய அல்லது அவர்கள் அரசு நிதி பெறும் எந்தவொரு கல்விப் பணிகளிலும் ஈடுபடத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சமூக அறிவியல் பாடத்திட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் மைக்கேல் டெனினோ மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சுபர்ணா திவாகர் மற்றும் அலோக் பிரசன்ன குமார் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியது. மேலும் சம்பந்தப்பட்டவரகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தது. மேலும் இப்பாடத்தைக் கொண்ட எட்டாம் வகுப்பு புத்தகங்களை அச்சிடவோ, விநியோகிக்கவோ அல்லது டிஜிட்டல் முறையில் பகிரவோ முழுமையான தடை விதிக்கப்பட்டது.

    வழக்கின் பின்னணி

    2026-ஆம் கல்வியாண்டிற்காக "சமூகத்தை ஆராய்தல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்" (Exploring Society: India and Beyond) என்ற புதிய பாடப்புத்தகத்தை NCERT வெளியிட்டது. இதில் "சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" என்ற தலைப்பில் ஒரு துணைப்பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இந்திய நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் அனைத்தும் அரசு அளித்த தகவல்களில் இருந்தே எடுக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தற்போது அப்புத்தகத்திற்கு தடைவிதித்துள்ளது.

    Next Story
    ×